சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய 31 வயது இளைஞர் pocso சட்டத்தின் கீழ் கைது...!
Seithipunal Tamil September 20, 2025 09:48 PM

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி, கடும் வயிற்றுவலி காரணமாக பெற்றோரால் தஞ்சை அரசு ராஜா மிராசுதாரர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்தச் சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தெரியவந்ததும், உடனடியாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

மேலும், காவல் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியுடன் காதல் தொடர்பு வைத்திருந்த செம்மண்குட்டை பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் அன்பழகன் (31) என்பவர், சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, காவலர்கள் அன்பழகனை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.