நாளை தமிழகம் முழுவதும் மகாளய அமாவாசை கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், முன்னோர்களுக்கு கொடுக்க வேண்டிய தர்ப்பணத்தை வீட்டிலிருந்தே எளிமையாக எப்படி கொடுப்பது என்று தெரிஞ்சுக்கோங்க.
மகாளய அமாவாசை என்பது இந்துக்களுக்கு மிக மிக முக்கியமான நாளாகும். முன்னோர்களை மனதுள் மானசீகமாக நினைத்து, அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு மனமுருகி மன்னிப்பு கேட்டு, எள்ளும், தண்ணீரும் இறைத்து, முன்னோர்களை வணங்கலாம். அன்றைய தினம் கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் நீராடி தர்ப்பண பூஜை செய்தல் நன்மை பயக்கம். அப்படி முடியாதவர்கள், மகாளய அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் அமாவாசையன்று காலையிலேயே தங்கள் வீட்டிலேயே அதிகாலையில் எழுந்து குளித்து, விரதம் தொடங்கி விட வேண்டும் காலையில் முழுவிரதம் இருந்து மனதில் வீட்டு பெரியோர்கள், முன்னோர்களை வணங்கி மதியம் சாப்பாடு தயாரித்து சூரியன் வந்ததும் படையலிட வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன்பு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கியும், காகங்களுக்கு சாதம் வைத்தும், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தும் இருக்க வேண்டியது அவசியம். இதன் பிறகு கடவுளை வழிபட்டு மதியம் உணவு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். இதன் மூலம் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?