ஆஸ்கர் விருதுக்கு ஜான்வி கபூர் நடித்த திரைப்படம் பரிந்துரை..!
Seithipunal Tamil September 21, 2025 02:48 AM

2026-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ஜான்வி கபூர் நடித்துள்ள 'ஹோம்பவுண்ட்' என்ற ஹிந்தித் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலமானது. சர்வதேச அளவில் உள்ள அனைத்து திரையுலகமே இந்த விருதை பெறுவது தான் அவர்களில் உயர்ந்த கனகாவும், உயரிய கௌரவமாகவும் வைத்திருப்பர்.

அந்த வகையில், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சாமுவேல் கோல்ட்வின் தியேட்டரில் வழங்கப்படும். இந்நிலையில் 2026-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து சிறந்த சர்வதேச பட விருதுக்கு 'ஹோம்பவுண்ட்' படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

இந்த படத்தை கரன் ஜோகர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் தயாரித்துள்ளனர். இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர், இயக்குநர், கதாசிரியர்கள், எடிட்டர், பத்திரிகையாளர் என 12 பேர் கொண்டு குழுவினர் பார்த்து ஒஸ்கார் விருதுக்கு அனுப்ப தேர்வு செய்துள்ளனர். இந்தப் படம் ஏற்கனவே கேன்ஸ் 78-வது திரைப்பட விழாவிற்கு தேர்வாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.