இட்லி கடை டிரெய்லர் கோவையில்…! திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் ஆச்சரியம்...!
Seithipunal Tamil September 21, 2025 04:48 PM

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படமாக ‘இட்லி கடை’ திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. தனுஷின் 52-வது படமாகும் இந்த முயற்சிக்கு இசையமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

மேலும், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அதுமட்டுமின்றி,படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது.

இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் டிரெய்லரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கோவையின் பிரபல ப்ரோஸோன் மாலில் நடைபெறும் இந்த சிறப்பு விழாவை முன்னிட்டு, படக்குழுவினர் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.