கரும்பு ஜூஸ் குடிக்க கூடாது சாப்பிடணும்…. 10 – 15 min புதுவித யுக்தி…? இணையத்தில் வைரலாகும் இளைஞர் வீடியோ
SeithiSolai Tamil September 21, 2025 06:48 PM

இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞர் வெளியிட்ட காணொளியில், கரும்புச்சாறு உட்கொள்ளும் முறை குறித்து புதுமையான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், கரும்புச்சாறு போன்ற திரவ உணவுகளை வெறுமனே குடிக்காமல், “சாப்பிட” வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதாவது, ஒரு மடக்கு கரும்புச்சாறை எடுத்து, வாயில் வைத்து எச்சிலுடன் கலந்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கரும்புச்சாறில் உள்ள சர்க்கரை உடலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், மருந்தாகச் செயல்படுவதாக அவர் விளக்குகிறார்.

View this post on Instagram

A post shared by 𝑺𝒖𝒏𝒅𝒂𝒓𝒆𝒔𝒂𝒏 𝑱𝒂𝒚𝒂𝒄𝒉𝒂𝒏𝒅𝒓𝒂𝒏 (@sundar_jc_)

இந்த முறையில், கரும்புச்சாறை குறைந்தது 15 நிமிடங்கள் பொறுமையாக உட்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதேபோல, பொதுவாக உணவுகளை சாப்பிடும்போதும் இதே கவனம் தேவை என்கிறார். உணவை நன்கு மென்று, கூழ் போன்ற நிலைக்கு வந்த பிறகே விழுங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.