45 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்..வாழை தோட்டத்துக்குள் அடுத்து நடந்த அதிர்ச்சி!
Seithipunal Tamil September 21, 2025 07:48 PM

தாய் போல் அன்பு காட்டிய பெண்ணை வேறு கண்ணோட்டத்தில் பார்த்த வாழை தோட்டத்துக்குள் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். 

கடந்த 15-ந்தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகாவில்  உள்ள வாழை தோட்டத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.  தகவல் அறிந்ததும் ஜவகல் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் என்பதும்அவரை யாரோ கொன்று உடலை வாழை தோட்டத்துக்குள் வீசியதும் தெரியவந்தது. 

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி கொலையான பெண்ணும், அவரது பக்கத்து வீட்ைட சேர்ந்த 17 வயது சிறுவனும் சண்டை போடுவதை பார்த்தததை  ஒருவர்  போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த போலீசார், சிறுவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த சிறுவன், பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக் கொண்டான்.   45 வயதான அந்த பெண் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். விவசாய கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.  தனது சொந்த மகனை போல நினைத்து அந்த வாலிபர்  மீது மிகுந்த அன்பு காட்டினார். அந்த சிறுவன் வளர்ந்த பிறகு அவனை பள்ளிக்கு அனுப்புவது, தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்டவற்றை தாய் அந்தஸ்தில் இருந்து அந்த பெண் செய்து வந்தார்.

ஆனால் அந்த சிறுவன், தாய் போல் அன்பு காட்டிய பெண்ணை வேறு கண்ணோட்டத்தில் பார்த்து வந்துள்ளான். இந்த நிலையில்தான் கடந்த 15-ந்தேதி  வாழை தோட்டத்துக்கு பெண் வேலைக்கு சென்றபோது அங்கு வந்த சிறுவன், ஆட்கள் யாரும் இல்லாததை கவனித்து அந்த பெண்ணிடம் காம இச்சையை தீர்க்க முயன்றுள்ளான்.

ஆனாலும் அந்த சிறுவன், பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது கத்தி கூச்சலிட்ட அவனை சரமாரியாக தாக்கியதுடன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவனை போலீசார் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.