தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பாலத்தின் சுவரில் பைக் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே துலுக்கன்குளம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சிவராஜ் (23), கூலி வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் காலனி தெருவை சேர்ந்த சந்தி முருகன் மகன் மாரீஸ்வரன் (29), இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்றுஇரவு விளாத்திகுளத்தில் இருந்து வேம்பார் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
பைக் வேம்பார் அருகே செல்லும் போது திடீரென நிலை தடுமாறி அங்குள்ள பாலத்தின் சுவரில் பைக் மோதியது. இதில் மாரீஸ்வரன் பின் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த சிவராஜ் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?