ஊழியர்கள் விரைவாக பலன்களை பெறும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் (EFPO – Employee Provident Fund Organization) பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக ஊழியர்கள் விரைவாக சேவைகளை பெற சில புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும். அந்த வகையில், தற்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது மிக சுலபமாக பிஎஃப் (PF – Provident Fund) தொகையை மாற்றம் செய்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இபிஎஃப்ஓவில் அமலுக்கு வந்துள்ள புதிய விதி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓவில் அமலுக்கு வந்த புதிய மாற்றம்செப்டம்பர் 18, 2025 அன்று ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சகம் புதிய பிஎஃப் விதி குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதுவரை Annexure K பிஎஃப் அலுவலகங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை ஊழியர்கள் கோரிக்கை வைக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு Annexure K வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ஊழியர்களே ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து Annexure K-வை பதிவிரக்கம் செய்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Pre Approval முதல் Easy EMI வரை.. பண்டிகை காலத்துக்கு லோன் வழங்கும் பஜாஜ் ஃபைனான்ஸ்!
வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க நடவடிக்கைஊழியர்களுக்கு வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும், அவர்கள் பிஎஃப் கணக்கை மிக எளிதாக அனுகக்கூடிய வகையில் Annexure K, பயனர்களே பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் வகையில் விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, இனி ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் மிக எளிதாக இணையதளம் மூலம் Annexure K-வை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க :ITR Filing : வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Annexure K என்றால் என்ன?Annexure K என்பது ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறும்போது பிஎஃப் பணத்தை மாற்றம் செய்வதற்கான ஆவணமாகும். இது ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பிஎஃப் பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யும் ஆவணம் ஆகும். இதுதவிர இந்த Annexure K-ல் ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள், அவர்கள் பிஎஃப் கணக்கை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்துகின்றனர், அவர்களின் பிஎஃப் கணக்கு இருப்பு ஆகிய சில முக்கிய தகவல்களும் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.