அமாவாசை நாட்களில் நிகழும் கிரகணங்கள் சூரிய கிரகணம் எனப்படுகிறது. 2025ம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மொத்தம் இந்த ஆண்டில் 2 சூரிய கிரகணமும், 2 சந்திர கிரகணமும் நிகழும். அந்த வகையில் ஏற்கனவே 1 சூரிய கிரகணம் மற்றும் 2 சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது. செப்டம்பர் 7ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்ந்து ரத்த நிலவு தென்பட்டது.
பலரும் வெறும் கண்களாலேயே பார்த்து மகிழ்ந்தனர். அந்த வகையில் 2025ம் ஆண்டின் அடுத்த சூரிய கிரகணம் மற்றும் கடைசி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த வருடத்தின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அமாவாசை நாளில், அதாவது இன்று செப்டம்பர் 21, 2025, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். நாளை நவராத்திரி பண்டிகை தொடங்கும்.
இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் செப்டம்பர் 21ம் தேதி இரவு 10:59 மணிக்கு நிகழும். இது மறுநாள் செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 3:23 மணி வரை நீடிக்கும். இந்த சூரிய கிரகணம் சுமார் நான்கரை மணி நேரம் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஏற்படும் இரண்டாவது கிரகணம் பகுதி சூரிய கிரகணமாகும். மேலும், இது இரவில் ஏற்படுவதால், இந்தியாவில் இது தெரியாது.
இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் கிடையாது. ஆனால் தெற்கு பசிபிக் பெருங்கடல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், தென் பெருங்கடல், பாலினீசியா, மெலனேசியா, நோர்போக் தீவு, தீவு, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் தெரியும். நாளை நவராத்திரி கொண்டாட உள்ள நிலையில், மக்கள் இன்றிரவு நிகழ இருக்கும் சூரிய கிரகணம் குறித்த அச்சத்தில் உள்ளனர். இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் அது குறித்து கவலைப்பட தேவையில்லை. எந்த ராசியினரும் பரிகார பூஜையும் செய்ய வேண்டியதில்லை. எப்போதும் போல் நாளை நவராத்திரி பண்டிகையைக் கொண்டாடலாம். கொலு வைப்பவர்கள் வழக்கம் போல் கொலு வைக்கலாம் என்று ஆச்சாரியார்கள் ட் தெரிவித்தனர்..
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?