கேரளாவில் நடைபெறும் ஐயப்பன் மாநாட்டில் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் முதலாவதாக பேச அனுமதிக்கப்பட்டதற்கு தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது.
தமிழகத்தில் முருகன் மாநாடு நடந்ததை போல கேரளாவில் இன்று பிரம்மாண்டமாக ஐயப்பன் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் பல்வேறு மத அமைப்புகளை சேர்ந்தவர்களும், கட்சி தலைவர்களும், மத தலைவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மேடையில் அவர்கள் பேசுவதற்காக அமர்ந்திருந்த நிலையில் தொடர்ந்து ஆர் எஸ் எஸ் தலைவர்கள் பேச அனுமதிக்கப்பட்டதால் பழனிவேல் தியாகராஜன் கோபமடைந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கண்டித்து அவர் எழுந்து செல்ல முயன்ற நிலையில் அவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் அமர வைத்ததுடன், அடுத்து அவரை பேச வைத்தனர். இதனால் சில நிமிடங்களுக்கு மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
Edit by Prasanth.K