ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது ஆனால் அவை எல்லாமே வெற்றி படங்களாக அமைவதில்லை. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி 10க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸானது. ஆனால் எந்த படமும் ஓடவில்லை. இந்நிலையில்தான் செப்டம்பர் 19ம் தேதி கடந்த வெள்ளிக்கிழமை 5 திரைப்படங்கள் வெளியானது அந்த படங்கள் என்ன வசூலை பெற்றிருக்கிறது என பார்ப்போம்.
சக்தி திருமகன்: இந்த படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த சக்தி திருமகன். இந்த படத்தை அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியிருந்தார். இந்த படத்தின் டிரைலரும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. படமும் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இப்படம் 1.70 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
KISS: அடுத்து நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் கிஸ். ரொமான்டிக் காமெடி வகையில் பேண்டஸி கலந்து உருவாகி இருந்த இப்படம் கடந்த இரண்டு நாட்களில் 95 லட்சம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தண்டகாரண்யம்: அடுத்து அதியன் ஆதிரை இயக்கத்தில் கெத்து தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்து தண்டக்காரண்யம்என்கிற திரைப்படம் வெளியானது. இயக்குனர் பா.ரஞ்சித் இப்படத்தை தயாரித்திருந்தார். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் பழங்குடியின மக்கள் மீது அதிகாரம் மிக்கவர்கள் செலுத்தும் ஆதிக்கத்தையும், வன்முறையையும் இப்படம் பேசியிருக்கிறது. விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடிக்க வில்லை. கடந்த இரண்டு நாட்களில் இப்படம் 45 லட்சத்தை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒருபக்கம் இயக்குனர் கௌதமன் இயக்கி நடித்த படையாண்ட மாவீரன் என்கிற படமும் வெளியானது. கடந்த இரண்டு நாட்களில் இப்படம் வெறும் 10 லட்சம் மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் வெள்ளிக்கிழமை வெளியான அனைத்து படங்களுமே பெரிய வெற்றியை பெறும் என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.