திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8ம் வகுப்பு பயின்று வரும் ஒரு சிறுமி வசித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 12ஆம் தேதி சிறுமியின் பெற்றோருக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை வீட்டை விட்டு சென்று விட்டார். இதையடுத்து சிறுமியின் தாய் விரக்தியில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்த நிலையில் பூமலுரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி பாலமுருகன் வந்தார். இவர் சிறுமியிடம் நைசாக பேசி காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கிறார். இதனால் மயங்கி விழுந்த சிறுமியை பாலமுருகன் தன் வீட்டுக்கு தூக்கிச் சென்றார். அதன்பின் நடந்த சம்பவம் குறித்து சிறுமிக்கு எதுவும் தெரியவில்லை.
அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த சிறுமிக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் தன் தாயிடம் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ந்துபோன சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வாறு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.