இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு சுவாரசியமான காணொளியில், போஸ்ட் பாக்ஸ் எவ்வளவு வித்தியாசமாகவும் புத்திசாலித்தனமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒருவர் தெளிவாகக் காட்டுகிறார். அவர் போஸ்ட் பாக்ஸைத் திறந்து காட்டி, மழை பெய்தால் தண்ணீர் உள்ளே நுழையாமல் தடுக்க என்னென்ன சிறப்பு வேலைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை விளக்குகிறார். உதாரணமாக, பாக்ஸின் உள்ளே டயம்-ஷேப்ட் வடிவமான அமைப்பு இருப்பதால், தண்ணீர் சேகரிக்காமல் நேராக வழி நடத்தப்படுகிறது, இது போஸ்ட் கார்ட்ஸ் மற்றும் லெட்டர்-ஐ பாதுகாக்க உதவுகிறது.
View this post on InstagramA post shared by Sivarama Krishnan (@japan_tamil_bros)
அதேபோல், தண்ணீர் ஏதேனும் உள்ளே சென்றால், அதை வெளியேற்றுவதற்கான டிரெயினேஜ் (drainage) அமைப்புகள் எப்படி வேலை செய்கின்றன என்பதையும் காணொளியில் விரிவாகக் கூறுகிறார். இந்த வடிவமைப்பு, மழைக்காலத்தில் கூட போஸ்ட்கள் பாதுகாப்பாக இருக்க உதவுகிறது, இது சாதாரண பாக்ஸ் வகைகளில் இல்லாத புத்திசாலித்தனம். இந்த காணொளி, அன்றாட பொருட்களின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பத்தைப் புரிய வைப்பதால், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.