திருச்சியில் முகநூல் மூலம் அறிமுகமான நண்பர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (21). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பகுதியில் உள்ள ஒரு மேன்சனில் தங்கி அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இளங்கோவனை சந்திக்க அடிக்கடி மாரிஸ்வரன் சென்று வந்துள்ளார். ஆனால் இளங்கோவன் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் சேர்ந்து கொண்டு மேற்கண்ட மாரீஸ்வரனை பாலியல் ரீதியாக(Homo sex) செய்து அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை மாரீஷ்வரனை அரியமங்கலம் அழைத்த இளங்கோவன் மற்றும் அவரது நண்பர்கள் மாரீஸ்வரனின் தவறாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்து மிரட்டி மாரீஸ்வரனின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறித்துள்ளனர். மேலும் மாரீஸ்வரன் அணிந்திருந்த தங்க செயினையும் பறித்துக் கொண்டு எப்பொழுது கூப்பிட்டாலும் வரவேண்டும் என மிரட்டி அனுப்பி உள்ளனர். இதனால் மன உளைச்சலடைந்த மாரிஸ்வரன் மண்டையூர் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் மாரிஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைககு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம குறித்து மண்டையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.