விஜய் பேச்சு எழுதி கொடுத்து படிப்பது போல் உள்ளது - அமைச்சர் சுப்பிரமணியன் பரபரப்பு பேச்சு.!!
Seithipunal Tamil September 22, 2025 08:48 AM

சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் படி அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கிய அவர் இன்று நாகை மற்றும் திருவாரூரில் 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார் . 

இந்தப் பிரசாரத்தில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்ததுடன், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லை என்றுத் தெரிவித்தார் .

தவெக தலைவர் விஜய்யின் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-

தவெக தலைவர் விஜயின் பேச்சு, யாரோ எழுதிக் கொடுத்து படிப்பதுபோல் உள்ளது. நாகை மருத்துவமனைக்கு சென்று விஜயை பார்க்கச் சொல்லுங்கள்" என்றுத் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.