ஆதார் அட்டை சேவைகள்: அடுத்த மாதம் முதல் கட்டண உயர்வா...?
Seithipunal Tamil September 22, 2025 10:48 AM

ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணத்தில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனுடைய புதிய கட்டண விதிகள் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆனால் இதுகுறித்து யூ.ஐ.டி.ஏ.ஐ. (UIDAI) இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.தற்போது முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் ரூ.50 ஆக இருந்த நிலையில், அது ரூ.75 ஆக உயரக்கூடும்.

அதேபோல் புகைப்படம் உள்ளிட்ட பிற விவரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அன்றாட வாழ்க்கையில் வங்கி சேவைகள், அரசு நலத்திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஆதார் அட்டை முக்கிய அடையாள ஆவணமாகப் பயன்பட்டு வருகிறது.

எனவே கட்டண உயர்வு பொதுமக்களை நேரடியாகத் தாக்கும் என்றாலும், அது மிகச் சிறிய அளவிலேயே இருப்பதாக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.