Kamal Vijay:விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த கமல்! இதையாவது புரியுற மாதிரி சொன்னாரே
CineReporters Tamil September 22, 2025 10:48 AM
எதிரெதிர் துருவமாக விஜய் கமல்:

சினிமாவில் ஒன்றாக பயணித்தாலும் அரசியல் களத்தில் எதிரெதிர் புள்ளிகளாக இருக்கிறார்கள் விஜயும் கமலும். போகும் போதெல்லாம் விஜய் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால் கமலோ அந்த ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். ஆனால் கமல் ஆரம்பத்தில் கட்சி ஆரம்பிக்கும் பொழுது இதே ஆளுங்கட்சியை விமர்சித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட ஸ்டாலினுடன் கமல் ஒரு மீட்டிங்கை போட்டார். ஆனால் அது கூட்டணி கிடையாது. அதையும் விட புனிதமானது என புதுசாக ஒரு விளக்கத்தை கொடுத்தார். இதை செந்தில் காமெடியுடன் ஒப்பிடலாம். பூவை பூவுனும் சொல்லலாம். புய்பம்னும் சொல்லலாம் என்பதை போலத்தான் இருந்தது. இருந்தாலும் கமலின் பேச்சும் அப்படித்தான் இருந்து வருகிறது.

புரியும்! ஆனா புரியாது:

யாருக்கும் புரியவும் கூடாது. ஆனால் புரிந்த மாதிரியும் இருக்கணும் என்பதை போல் ஒரு அறிக்கையை தட்டி விடுவதுதான் கமலின் வழக்கம். ஏன் சமீபத்தில் கூட ரோபோ சங்கர் இறப்பிற்கு கூட ஒரு இரங்கல் செய்தியை போட்டார். ஆனால் என்ன சொல்ல வந்தார் என்பது யாருக்கும் புரியவில்லை. கவிதை நயத்துடன் பேசுகிறேன் என்ற பேர்வழியில் சொல்லிவிட்டு சென்று விடுகிறார் கமல்.

ஆனால் இப்போது விஜய்க்கு சரியான ஒரு அட்வைஸை கமல் வழங்கியிருக்கிறார். ‘கூடுகிற கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. இது எனக்கும் பொருந்தும். விஜய்க்கும் பொருந்தும். நல்ல பாதையில் செல்லுங்கள், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காக செய்யுங்கள், இதுதான் விஜய்க்கு என்னுடைய அட்வைஸ்’ என சொல்லியிருக்கிறார் கமல். ஆனால் இதை பார்த்த ரசிகர்கள் கமலை கிண்டலடித்து வருகின்றனர்.

கமலை விமர்சிக்கும் ரசிகர்கள்:

ஆண்டவா, எப்படி டிவியை போட்டுடைத்து திரும்ப ஒட்ட வச்சீங்களே அதான் நல்ல பாதையா? என்று கமெண்டில் கிண்டலடித்துள்ளனர். இருந்தாலும் இப்போதையை சூழலில் அனைத்து அரசியல் புள்ளிகளுக்கும் விஜய் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அனைவருமே ஒரு பயத்தில்தான் இருக்கிறார்கள். ஏனெனில் போகிற இடமெல்லாம் அலை போல கூட்டம் கூடி விடுகிறது.

நேற்று திருவாரூரில் தேரை இழுத்த மாதிரி விஜய் வண்டியை சுற்றி ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். அலை போல மக்கள் மிதந்து வந்ததை பார்க்க முடிந்தது. இருந்தாலும் இன்னும் அவர் முன்னேறி போக வேண்டும். எப்படியாவது வருகிற 2026 தேர்தலில் திமுக வா? தவெக வா என்று பார்த்துவிடலாம் என்ற முடிவோடுதான் இருக்கிறார் விஜய்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.