ஆஸ்கர் விருதுக்கு இந்தியப் படங்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2026 ஆஸ்கர் போட்டிக்கான பட்டியலில் பல பிரபல படங்கள் இடம்பிடித்துள்ளன.
இதில் இந்திய திரைப்பட கூட்டமைப்பு வெளியிட்ட பட்டியலில், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, தனுஷின் குபேரா, விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா, சுகிருதி வேணி நடித்த காந்தி தாத்தா செட்டு, வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி நடித்த சங்கராந்திக்கு வஸ்துன்னம், கன்னடத்தில் வீர சந்திரஹாசா, இந்தியில் ஹோம்பவுண்ட், கேசரி 2, தி பெங்கால் பைல்ஸ், புலே உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றன.
ஆனால், இறுதியில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக ஹோம்பவுண்ட் திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ‘சிறந்த சர்வதேச திரைப்படம்’ பிரிவில் இந்தியா வெற்றியைக் காணுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரவிருக்கும் 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.