இன்று சென்னையில் 69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் நாசர், விஷால்,கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் டெல்லி கணேஷ், ராஜேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 நட்சத்திரங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பழம்பெரும் நடிகை எம்.என். ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, மேலும் தேசிய விருது பெற உள்ள எம்.எஸ். பாஸ்கர்,ஊர்வசி, ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, திரைத்துறைக்கு நன்மை செய்த மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கிய நடிகர் ரஜினி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசாங்க ஒப்புதல் பெற்ற ஆண்டறிக்கை, வரவு-செலவு அறிக்கைகள், மற்றும் சட்ட ஆலோசகராக கிருஷ்ணா ரவீந்திரன் நியமனம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
நடிகர் சங்க உறுப்பினர்களை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.