பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானின் மனைவி ஒரு ஆண் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அதிபராக இருந்து வருபவர் 47 வயதாகும் இமானுவேல் மெக்ரோன். இவருக்கும் இவரது பள்ளி பருவ ஆசிரியையான 72 வயதான ப்ரிஜிட்டுக்கும் இடையேயான காதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ப்ரிஜிட்டுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இமானுவேல் அவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ப்ரிஜிட் ஒரு பெண்ணே இல்லை, ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என அமெரிக்க வலதுசாரி விமர்சகரான கேண்டர் ஓவன்ஸ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இதை எதிர்த்து பிரிஜிட் அமெரிக்க நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தான் பிறப்பாலேயே ஒரு பெண் தான் என்பதற்கான ஆதாரங்களை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இது பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K