தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு பலரின் மனதையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின், அவருடன் நடந்த மனம் கனிந்த உரையாடலை பகிர்ந்து கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
மருத்துவமனையில் உயிரிழப்புசின்னத்திரை மற்றும் திரைப்பட உலகில் ரசிகர்களால் நேசிக்கப்பட்ட ரோபோ சங்கர், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் செய்தி வெளியானதும், திரைப்படத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இயக்குநர் மிஷ்கின் தனது வீடியோவில், 10 நாட்களுக்கு முன்பு தெரியாத எண்ணிலிருந்து வந்த அழைப்பை நினைவுகூர்ந்தார். அதில் ரோபோ சங்கர், 'அண்ணே நான் ரோபோ சங்கர் பேசுறேன்னே. உங்கள் நிகழ்ச்சிகளை பார்க்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்களை நேரில் பார்க்க வேண்டும்' என அன்போடு கூறியதாக அவர் பகிர்ந்தார். பின்னர் சங்கரின் மனைவியும் பேசினார். அவரின் குரலில் இருந்த பாசத்தைக் கேட்டு, மிஷ்கின் 'நீ என் தங்கை அம்மா' என்று அன்போடு சொன்னதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: நாளை உலகளவில் முடங்குகிறது இன்டர்நெட் சேவை? தி சிம்ப்ஸன்ஸ் தொடரில் தகவலால் நெட்டிசன்கள் அதிர்ச்சி.!
சமையல் குறித்த உரையாடல்மிஷ்கின், 'எப்போது எனக்கு சமைத்து தருவாய்?' என்று கேட்டபோது, ரோபோ சங்கர் 'அண்ணே நாளைக்கே சமைத்து தருகிறேன்' என அன்புடன் பதிலளித்ததாகவும், ஆனால் பத்து நாட்களுக்குள் இப்படி நடந்துவிட்டது எனவும், மிகுந்த வேதனையுடன் கூறினார்.
இயற்கை இழந்த கலைஞர்மிஷ்கின் தனது உரையில், 'மக்களை மகிழ்விக்கும் மகா கலைஞர்களை இயற்கை எடுத்து விடுகிறது. முன்பு விவேக், இப்போது ரோபோ சங்கர். இந்த இருள் நம்மை வாட வைக்கிறது' என உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் பகிர்ந்த இந்த உணர்ச்சி பூர்வமான வீடியோ, ரோபோ சங்கரின் அன்பான மனநிலையையும், அவரின் பாசப்பூர்வமான வாழ்வியலையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ரோபோ சங்கரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றே அனைவரும் பிரார்த்தனை செய்கின்றனர்.
View this post on InstagramA post shared by Mysskin (@directormysskin)
இதையும் படிங்க: பாரக்கவே புல்லரிக்குது....தண்ணீர் கொடுத்த நபருக்கு கருப்பு ராஜ நாகம் என்ன பண்ணுதுனு பாருங்க! இணையத்தில் வைரலாகும் காணொளி....