சேலம் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து உரையாற்றினார். 1 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் NDA கூட்டணி விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினேன். டெல்லியில் அமித்ஷாவுடன் பழனிசாமி பேசியது குறித்து ஆலோசிக்கவில்லை. அரசியல் ரீதியான ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. பாமக உள்ளிட்ட எந்த உட்கட்சி பிரச்சனையிலும் பாஜக தலையிடாது. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. அதிமுக ஒன்றிணைப்பு குறித்து காலம்தான் பதில் சொல்லும்.
விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார். கூட்டம் வருவதை வைத்து திமுக- தவெக இடையேதான் போட்டி என்று சொல்லக்கூடாது. தேர்தல் வர வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும், மக்கள் ஓட்டுப்போட வேண்டும், அதற்கு பிறகுதான் சொல்ல முடியுமே தவிர, விஜய் பரப்புரை குறித்து தற்போது ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது.