சென்னை மந்தவெளியில் உள்ள நடிகர் எஸ்வி சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில் நடிகை எஸ்வி சேகர் வீட்டில் குண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அனுப்புனர் சோ ராமசாமி .. என மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் சோதனையிட்டபோது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இந்த விஷமிகளை பட்டினம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர். இவரது வீட்டுக்கு ஏற்கனவே ஒருமுறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.