சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் 21ஆம் தேதி அதாவது இன்று முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை அதாவது வரும் வெள்ளிக்கிழமை வரை தமிழகத்தில் பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியே இந்த மழைக்குக் காரணம்.
செப். 21 முதல் செப். 24 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Edited by Siva