தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை இன்று பிற்பகல் தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
அதன் படி நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு திருவாரூர் கிளம்பிய விஜய்க்கு அங்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்த நிலையில், திருவாரூரில் பரப்புரையை தொடங்கிய விஜய் பச்சை துண்டு உடன் பேச்சை ஆரம்பித்தார்.
திருவாரூர் மாவட்டம் சொந்த மாவட்டம் என முதல்வர் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் திருவாரூர் கருவாடாக காய்கிறது. அவங்க அப்பா பெயரில் பேனா வைக்க சொல்கிறீர்கள் அனைத்து இடத்திற்கும் அவர் பெயர் வைக்கிறார்கள் ஆனால் உங்க அப்பா பிறந்த ஊரில் அடிப்படை சாலை வசதி கூட இல்லையே சிஎம் சார்
திருவாரூர் மண்ணின் அடையாளமான நீண்ட வருடங்களாக ஓடாத ஆழி தேரை ஓட வைத்தது நான் தான் என மாறு தட்டி சொல்லிக் கொண்ட கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தமிழ்நாடு என்ற தேரை ஓடாமல் நான்கு புறமும் கட்டையை போட்டு தடுத்து விட்டார்.திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைத்தால் மட்டும் போதுமா?
இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அந்த அமைச்சரோட வேலையே, சி.எம் குடும்பத்துக்கு சேவை செய்வது தான்...அவருக்கு மக்கள் சேவை முக்கியம் என புரிய வைக்கவேண்டும்.
நெல் கொள்முதலுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.40 கமிசன் வாங்குகிறார்கள்
டெல்டா மாவட்ட விவசாயிகள் கொடுமையை அனுபவித்து வருகிறார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை ஒன்றுக்கு 40 கமிஷன் வாங்குகிறார்கள். ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன் வாங்கும் இந்த அரசு இந்த நான்காண்டுகளில் பல கோடிகள் கமிஷனாக வாங்கி உள்ளனர். இதை என்னிடம் சொன்னது விவசாயிகள் தான்