பூம்புகாரின் பெருமையை வெளிக் கொணர்வோம் - தமிழக முதல்வர் ஸ்டாலின்.!!
Seithipunal Tamil September 21, 2025 10:48 PM

தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள "பூம்புகாரில்", பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றுத் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நம் தாய்மடி எனச் சொன்னோம்!

இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!

அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்!!! என்றுத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.