மாபெரும் சூப்பர்ஹீரோ மீண்டும் அதிரடி! அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே 2026 டிசம்பர் 18-ம் தேதி ரிலீஸ்...!
Seithipunal Tamil September 21, 2025 06:48 PM

பேட்மேன், அயர்ன்மேன், ஸ்பைடர்மேன், ஹல்க், தார் போன்ற சூப்பர்ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் அசைக்க முடியாத ரசிகர் பட்டாளம் உள்ளது. வசூலில் சாதனை படைக்கும் இந்த வரிசையில், தனிப்பட்ட ஹிஸ்டரி வைத்திருப்பது அவெஞ்சர்ஸ் தொடர்.அந்த தொடரின் அடுத்த அத்தியாயமாக, தற்போது ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ எனும் மாபெரும் படம் உருவாகி வருகிறது.

‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் மீண்டும் இயக்கக் களம் இறங்கியுள்ளனர்.

இந்த மாபெரும் படத்தில், ரசிகர்களின் பிரியமான ராபர்ட் டவுனி ஜூனியர் முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் களமிறங்குகிறார். அதோடு, ‘பிளாக் பாந்தர்: வாங்டா ஃபரெவர்’ படத்தில் ஷூரி கதாபாத்திரமாக கவர்ந்திழுத்த லெட்டிடியா ரைட்வும் முக்கியமான வேடத்தில் தோன்ற உள்ளார்.

மேலும்,மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ உலகம் முழுவதும் 2026 டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது, படத்தின் இறுதி கட்ட பணிகள், குறிப்பாக விஎஃப்எக்ஸ் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.