கர்நாடக மாநிலத்தில் 2010ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு அறிவியல் பூர்வமாக நடத்தப்படவில்லை எனக் கூறி லிங்காயத், ஒக்கலிக சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இதனையடுத்து அந்த கணக்கெடுப்பு அறிக்கையை கைவிடுவதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து புதிதாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். அது செப்டம்பர் 22ம் தேதி இன்று தொடங்கும் என சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த முறை புதிதாக 336 சாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இதில் குறிப்பாக சுமார் 47 கிறிஸ்தவ துணை சாதிகள் சேர்க்கப்பட்டன. இதற்கு பா.ஜனதா உட்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய சாதிகளால் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து மந்திரிசபை கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உட்பட சில அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த கணக்கெடுப்பு நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் சித்தராமையா, குழப்பங்கள் தீர்க்கப்பட்டு திட்டமிட்டப்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு செப்டம்பர் 22ம் தேதி தொடங்கப்படும் என அறிவித்துள்ளர்.
அதன்படி கர்நாடகத்தில் இன்று செப்டம்பர் 22ம் தேதி திங்கட்கிழமை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது.இந்த பணியில் 1¾ லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணி அக்டோபர் 7ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சுமார் 7 கோடி பேரின் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிப்பார்கள். மக்கள் தங்களிடம் உள்ள ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தயார் நிலையில் வைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பாளர்கள் 60 கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரிக்க உள்ளனர். ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள், கால்நடைகள், கல்வி, பொருளாதார நிலை, மாதம் மற்றும் ஆண்டு வருமானம், வாகனங்கள், சொத்து விவரங்கள், வங்கி கடன், தனியாரிடம் இருந்து வாங்கிய கடன், நோய் பாதிப்புகள், மாற்றுத்திறனாளி விவரம், வேலை விவரம் பல்வேறு தகவல்களை பொதுமக்கள் வழங்க வேண்டும். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கிறிஸ்தவ மதத்தில் 33 துணை சாதிவிவரங்கள் கைவிடப்பட்டு உள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் ஆணை தலைவர் மதுசூதன்நாயக் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அந்த துணை சாதிகள் குறித்த விவரங்களை சேகரிக்கலாம் எனவும் அதற்கென்று தனி பகுதி வழங்கும் முடிவை கைவிட்டு இருப்பதாகவும் கூறினார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒக்கலிகர் சமூகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்களுக்கு அநீதி ஏற்படக்கூடாது எனக் கூறியுள்ளனர். இந்த கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் சமூகங்களுக்கு மாநிலத்தின் வளங்கள் பகிர்ந்து அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது முதல்வர் சித்தராமையாவின் கனவு திட்டம் ஆகும். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?