2025 ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி பாகிஸ்தானை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த வெற்றிக்கு இடையிலும், போட்டி மைதானத்தில் சில சர்ச்சைகள் நிலவின. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூஃப், வார்த்தை சண்டைகளில் ஈடுபட்டு, இந்திய தொடக்க வீரர்களின் கோவத்தை தூண்டினர்.
குறிப்பாக ஹாரிஸ் ரவூஃப், பந்து வீசும் எல்லைக்கு அருகில், தனது கையில் ஒரு போர் விமானம் கீழே விழும் போல சைகை செய்தார். இது, மே மாதத்தில் பாகிஸ்தான் ஆறு இந்திய போர் விமானங்களை வீழ்த்தியதாகவும், அதனை நினைவூட்டும் செயல் எனவும் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
“>
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக வைரலாகி, ரசிகர்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியது. இந்தியா போட்டியில் சாதனை படைத்தாலும், பாகிஸ்தானின் செயல்கள் வெகுவாக விமர்சிக்கப்பட்டன.