இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இடைக்கால தலைவராக ராஜுவ் சுக்லா செயல்படுகிறார். பிசிசிஐ தலைவராக இருந்த ரோஜர் பின்னி 70 வயது ஆனதால் சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து வருகிற 28ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தின் போது பிசிசிஐ புதிய தலைவர் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சிஎஸ்கே முன்னாள் வீரரும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனுமான மிதுன் மன்ஹல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த பதவிக்கு இவர் ஒருவர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக இவரே அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், பிசிசிஐ பொருளாளராக முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ரகுராம் பாட் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது