அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் தனது சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளுமாறு ஈபிஎஸ்க்கு நிர்வாகிகளுடன் சென்று அழைப்பு விடுத்தார். சேலத்தில் உள்ள பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஈபிஎஸ், அன்புமணி, பிரேமலதாவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் தனது சுற்றுப்பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்க உள்ளார். நேரடியாக மக்களை களத்தில் சந்தித்து பாஜகவின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை எடுத்துரைக்கவுள்ளார். இதற்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.