பெங்களூரு, செப்டம்பர் 22 : பெங்களூரில் (Bengaluru) நண்பர்களுடன் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றாக மது குடிக்க திட்டமிட்ட நண்பர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விபரீதத்தில் முடிந்த நண்பர்களின் டிரிங்க்ஸ் பார்டிகர்நாடகா மாநிலம் கலபுரகி பகுதியை சேர்ந்தவர் சந்த்சாய். இவரது மனைவி டெல்லியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று சந்த்சாய் தனது நண்பர்களை மது குடிப்பதற்காக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். திட்டமிட்டபடியே நண்பர்கள் அனைவரும் இணைந்து மது குடிக்க தொடங்கியுள்ளனர். அப்போது ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் போது சந்த்சாய்க்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் மதுபோதையில் இருந்த நிலையில், வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதையும் படிங்க : எமனாக மாறிய இன்ஸ்டா காதல்.. முந்திரி தோப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்.. பகீர் பின்னணி!
நிர்வாணமாக்கி தாக்கிய நண்பர்கள்இந்த நிலையில், ஆத்திரமடைந்த சந்த்சாயின் நண்பர்கள் அவரை நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். இதில் சந்த்சாய் பலத்த காயமடைந்துள்ளார். இதனால் அவரது உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் அவர சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்துவிட்டதை அறிந்த அவரது நண்பர்கள் அவரை வீட்டிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், அது குறித்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க :‘எனக்கு 6 பானிபூரி வேணும்’ நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்.. திணறிய போலீஸ்!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சந்த்சாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்துவிட்டு தலைமறைவான சந்த்சாயின் நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர். டிரிங்க்ஸ் பார்டியில் சந்த்சாய் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.