எவ்வளவு முட்டு கொடுத்தாலும் நடக்காது.. ஓடிக்கிட்டே இருப்பேன்.. ஹேட்டர்ஸ்க்கு kpy பாலா பதிலடி
CineReporters Tamil September 23, 2025 05:48 AM
kpy பாலா :

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு காமெடி ஷோவின் season 6 winner தான் கேபிஒய் பாலா. தனது அசர வைக்கும் கவுண்டர் பன்ச்சால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். தமிழ் சினிமாவில் கவுண்டர் காமெடிக்கு என்று பேர் போனவர் கவுண்டமணி.

இவரின் கவுண்டர் அட்டாக் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதன் பிறகு சந்தானம் அந்த இடத்தில் கொஞ்ச காலம் சுற்றி வந்தாலும் தற்போது kpy பாலா அடுத்த தலைமுறை நடிகனாக வரிசையில் பயணித்து வருகிறார். இவரின் அசாத்திய திறமையை கண்டறிந்த விஜய் டிவி தனது அனைத்து reality show-களிலும் பாலாவை பயன்படுத்த தொடங்கியது.

இதனால் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரத் தொடங்கியது. யூடியூப் தொகுப்பாளர் , award function தொகுப்பாளர், இன்டர்நேஷனல் ஷோ என்று பயணிக்க ஆரம்பித்தார். ஒரு மனிதன் இப்படி தனக்கு வரக்கூடிய பணத்தை தனக்காக செலவழிப்பது தான் பார்த்திருக்கிறோம். ஆனால் பாலா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஏழை மக்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்.

கலியுக கர்ணன் பாலா :

ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது ஏழை குழந்தைகளுக்கு கல்வி செலவு, முதியோர்களுக்கு மருத்துவ செலவு, ஆட்டோ ரிக்ஷா வாங்கி கொடுப்பது போன்ற பல உதவிகளை தனி ஒரு அரசாங்கமாய் நின்று உதவி செய்து வந்தார். பாலாவுக்கு இதற்காக மக்களிடம் இருந்து பாராட்டு வந்தது. மேலும் அவர்களின் நன் மதிப்பையும் பெற்றார். இதனால் பாலா வெள்ளி திரையில் கால் பதிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
இயக்குனர் ஷெரிஃப் இயக்கத்தில் இவர் நடித்த ’காந்தி கண்ணாடி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. Sentiment emotional drama-வாக இருந்த இந்த திரைப்படம் வெகுஜன மக்களை கவர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பாலா தலையில் இடியை இறக்கியது போல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதுவரை பாலா செய்து வந்த உதவிகள் அனைத்தும் யாரோ ஒருவர் தூண்டுதலின் பெயரில்தான் நடந்து வருகிறது.

ஹேட்டர்ஸ் பரப்பி அவதூறு :

அதுமட்டுமில்லாமல் பாலாவுக்கு இவ்வளவு உதவி செய்ய பணம் எங்கிருந்து வந்தது? அவர் இன்டர்நேஷனல் கைக்கூலியா? பாலா தமிழ்நாட்டுக்கு பேராபத்து. என்று புரளியை கிளப்பி வந்தனர். இந்நிலையில் பாலா தன் மீது வந்த ஆதாரம் அற்ற புகார்களுக்கு பதில் அளித்துள்ளார் அதில்,” முன்பெல்லாம் கெட்டது பண்ணா தான் பிரச்சனை வரும். ஆனா இப்போ நல்லது பண்ணாவே பிரச்சனை வருது. அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அடிவயிற்றில் கனமில்லை என்றால் நிம்மதியாக இருக்கலாம்”.

”என் மீது எதுவுமே தப்பில்லை. என்ன பத்தி தப்பா பேசி அதன் மூலமா யூட்யூப்ல அவங்களுக்கு காசு சம்பாதிக்கிறாங்கன்னா எனக்கு சந்தோஷம் தான். நம்ம யாருன்னு மக்களுக்கு தெரியும். தேவையில்லாத வதந்திகளுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டாம் என்று மக்களே என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். நான் இன்னும் கடினமாக உழைத்துக் கொண்டே இருப்பேன். மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பேன். உதவி செய்வது என்னுடைய hobbie அதை செய்து கொண்டே இருப்பேன்”. என்று தன் மீது அவதூறு பரப்பிய ஹேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.