நாகூர் தர்காவில் அன்புமணி ராமதாஸ் வழிபாடு... நாகையில் நடைபயணம்!
Dinamaalai September 23, 2025 11:48 AM

 
அன்புமணி ராமதாஸ் நாகையில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நாகூர் தர்காவில் அன்புமணி ராமதாஸ் வழிபாடு செய்தார். 

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பாமக யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் இரு தரப்பிலும் பல்வேறு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியில் தனது வலிமையை நிலைநாட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நாகூரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான தர்காவிற்கு அன்புமணி ராமதாஸ் சென்றார். தர்காவில் அன்புமணி ராமதாஸ் மத வழிபாடு நடத்தினார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.