சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வரும் நிலையில் நிபுணர்கள் ஒரு லட்சத்தை எட்டும் என்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 560 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
தற்போது இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் 560 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் 83440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 10440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 148 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 148000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.