திருப்பதி கோயில் : ரூ.100 கோடி ஊழல்! - ஜெகன்மோகன் ரெட்டி மீது தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு
Vikatan September 23, 2025 02:48 PM

முன்பு திருப்பதி கோயிலில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது என்று தற்போது ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசக் கட்சியின் பொது செயலாளர் நாரா லோகேஷ் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார் அவர். மேலும், அவர் ஆந்திராவை இதற்கு முன் ஆட்சி செய்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் மீது தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

திருப்பதி அந்த வீடியோ குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது...

"ஒய்.எஸ்.பி திருடர்கள் ஶ்ரீயின் சொத்துகளைக் கொள்ளையடித்துள்ளனர். நூறு கோடி ரூபாய் பணத் திருட்டுக்குப் பின்னால் ஒய்.எஸ்.பி தலைவர்கள் தான் இருக்கிறார்கள்.

ஜெகனின் ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் ஊழல்கள் மலிந்து கிடந்தன.

திருடர்கள், கொள்ளையர்கள், மாஃபியா டான்களுக்கு ஆதரவாக ஜெகன் இருந்தார். சுரங்கங்கள், நிலங்கள், காடுகள் என அனைத்திலும் ஜெகனின் கும்பல் மக்களைக் கொள்ளையடித்தது.

கடைசியில், அவர்கள் திருமலா ஶ்ரீவாரியின் சொத்துகளைக் கூட விட்டு வைக்கவில்லை. திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமணா கருணாகர் ரெட்டியின் உதவியால் தற்போது இந்தத் திருடர்கள் பிடிப்பட்டுள்ளனர்.

கோடிக்கணக்கான சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அந்தப் பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

அதிகாரிகளின் ஆதரவுடன் ஜெகன் கும்பல் ஸ்ரீவாரியில் செய்யாத ஊழல் எதுவும் இங்கே இல்லை. பக்தர்கள் ஒரு சிறந்த பிரசாதமாக நினைக்கும் லட்டை அசுத்தப்படுத்தியுள்ளனர். அன்ன பிரசாதத்தில் ஊழல் நடந்துள்ளது.

திருமலா தரிசனத்தை விற்றதன் மூலம், எளிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தது கடினமாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Nara Lokesh (@naralokesh)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.