கடலுக்கு சென்ற மீனவர் மாயம்... மனைவி, 3 குழந்தைகள் பரிதவிப்பு!
Dinamaalai September 23, 2025 02:48 PM

 

தூத்துக்குடியில் கடலுக்கு சென்ற மீனவர் காணாமல் போன நிலையில் அவரது குடும்பத்திற்கு அரசின் நலதிட்ட உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த காளிமுத்து மனைவி என்பவர் தனது உறவினர்கள் மற்றும் அண்ணா சங்குகுளி தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், துாத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த காளிமுத்து அண்ணா சங்குகுளி தொழிலாளர். இவர் தருவைக் குளத்தைச் சேர்ந்த மிக்கேல் ஆரோக்கியம் மகன் தினேஷ்சிங் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப்படகில் கடந்த 19.8.2025 அன்று தங்கு கடலுக்கு சென்றபோது காணாமல் போய்விட்டார். 

இதுகுறித்து கடலோர காவற்படையிலும் புகார் செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பெறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுநாள் வரையிலும் எந்தவிதமான தகவலும் இல்லை. இதனால் குடும்பம் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பரிதவித்துக் கொண்டிருக்கிறது. அவரது இறப்பை உறுதி செய்து இறப்பு சான்றிதழ் வழங்கவும், மீனவ குடும்பத்திற்கு கிடைக்கப் பெற வேண்டிய அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் குழந்தைகளுக்குரிய கல்வி நலநிதி ஆகியவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.