இன்று முதல் கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.தினந்தோறும் அதிகாலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து பெங்களூருவுக்கு உதய் என்ற டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மதியம் 12.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதில் 5 இரட்டை அடுக்கு ஏ.சி. பெட்டிகள், 5 சாதாரண பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் தசரா பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் உதய் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22665) இன்று (திங்கட்கிழமை) முதல் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும். அதேபோல் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?