மக்களே அலர்ட்..! “சென்னையில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை”… தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
SeithiSolai Tamil September 23, 2025 05:48 PM

சென்னையில் இன்று (செப். 23) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், மத்திய ஆந்திரப் பகுதிகளிலும் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

இந்நிலையில், வரும் 25ஆம் தேதி, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26ஆம் தேதி தெற்கு ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் அருகிலுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெற்று, 27ஆம் தேதி கரையை கடக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

செப். 23 (இன்று): வடதமிழகம்: சில இடங்களில், தென்தமிழகம், புதுவை, காரைக்கால்: ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப். 24, 25 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரிரு இடங்கள் புதுவை, காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்றைய வானிலை (செப். 23): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.அதிகபட்ச வெப்பநிலை: சுமார் 33°C குறைந்தபட்ச வெப்பநிலை: 26–27°C ஆகவும் இருக்கக்கூடும்.

மேலும் இன்று முதல் 26ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலையில் பெரிதான மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், சில இடங்களில் வெப்பநிலை 2–3°C வரை இயல்பை விட அதிகமாக இருக்கலாம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 23-09-2025 மற்றும் 24-09-2025:

தென்தமிழக கடலோரம், வடதமிழக கடலோரத்திற்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 40–50 கிமீ வேகத்தில், இடைஇடையே 60 கிமீ வேகத்துடன் வீசக்கூடும்.

25-09-2025 & 26-09-2025: தமிழக கடலோரங்கள் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் அதேபோல் சூறாவளிக்காற்று வீசும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில்: 23-09-2025: தெற்கு & மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் 40–60 கிமீ வேகத்தில் காற்று வீசும். 24-09-2025:தெற்குமத்திய & வடக்கு வங்கக்கடலில் 45–65 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும். அரபிக்கடலின் தென்மேற்கு பகுதிகளிலும் 45–65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும் இதனால் மீனவர்கள் மேற்கண்ட நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.