தெரு நாய்களுக்கு உணவளிப்போர் மீது தாக்குதல், தொந்தரவுகளை தடுக்கக்கோரி ப்ளூ கிராஸ் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாட்டில் தெரு நாய்களுக்கு உணவளிப்போர் மீதான தாக்குதல் மற்றும் தொந்தரவுகளை தடுக்கக்கோரி புளூ கிராஸ் அமைப்பினர் டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாய்களுக்கு உணவளிப்பவர்கள் மீதான தாக்குதலை தடுக்க காவல்நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு வலியுறுத்தினர். மேலும் சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தனியே இடம் ஒதுக்கவும் மாநகராட்சிக்கு புளு கிராஸ் கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் முகாந்திரம் இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள், தனியாக சுற்றறிக்கை தேவையில்லை என புளூ கிராஸ் அமைப்புக்கு டிஜிபி தரப்பு கூறியுள்ளது. தெருநாய் விவகாரத்தில் குற்றங்களை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாய் - மனித மோதல்களில் முகாந்திரம் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் கடிதம் எழுதியுள்ளனர்.