தமிழக அரசின் கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் விஏஓக்கு கீழ் வரும் கிராம உதவியாளர் பணிகளுக்கு சமீபத்தில் பணி நியமனம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த பணிகளில் சேர்வதற்கான வயது வரம்பை தமிழக அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது.
தற்போதைய புதிய உத்தரவின்படி, கிராம உதவியாளர் பணிக்கு பொதுப்பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு 39 ஆகவும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது உச்ச வரம்பு 42 ஆகவும் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Edit by Prasanth.K