அரசின் பொது நிதியை பயன்படுத்தி தீபாவளி மற்றும் பிற பண்டிகைகளின் போது பரிசு பொருட்களுக்காக செலவிடுவதற்கு மத்திய நிதியமைச்சகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
'நிதிக் கட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியமில்லா செலவினங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவளி மற்றும் பிற திருவிழாக்களுக்கான பரிசு உள்ளிட்ட பொருட்களுக்கு அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசின் பிற துறைகளுக்கு எந்தச் செலவும் ஏற்படுத்தப்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு செலவினத்துறை செயலாளர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்தக் கட்டுப்பாடு, உடனடியாக அமலுக்கு வருகிறதுதாக சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.