கேரள அரசு சபரிமலையை வைத்து பக்தர்களை ஏமாற்றுவதாகவும், இது ஒருவிதமான 'பிக்-பாக்கெட்' செயல் என்றும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 2024-25 நிதியாண்டில் மட்டும் பக்தர்கள் ₹421 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளிலும் தலா ₹350 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. இருந்தும், சபரிமலை மேம்பாட்டுப் பணிகளுக்காக அடுத்த 50 ஆண்டுகளுக்கு ₹1,000 கோடி ஒதுக்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் பெரும் வருமானம் வரும் நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிதி ஒதுக்குவதாகக் கூறுவது, பக்தர்களின் உணர்வுகளைச் சுரண்டுவதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.
கடவுள் நம்பிக்கை இல்லாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் பினராயி விஜயன், அரசியல் ஆதாயத்துக்காக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டை நடத்துவதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மேலும், சனாதனத்திற்கு எதிராக பேசும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பதிலாக இரண்டு தமிழக அமைச்சர்கள் மாநாட்டுக்கு சென்றதை அவர் விமர்சித்தார்.
Edited by Mahendran