நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் மீதும், ரன்பீர் கபூர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் 'தி பாட்ஸ் ஆப் பாலிவுட்' (The Bads of Bollywood)என்ற வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.
ஆர்யன் கான் இயக்கிய இந்த வெப் சீரிஸில் ராகவ் ஜுயால், மனோஜ் பஹ்வா, மோனா சிங், அன்யா சிங், கௌதமி கபூர், ரஜத் பேடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
சல்மான் கான், கரண் ஜோஹர் மற்றும் ரன்பீர் கபூர் போன்ற பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்திருக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி இந்த வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.
இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் மீதும், ரன்பீர் கபூர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மும்பை காவல் துறையை மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
“நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியான 'தி பாட்ஸ் ஆப் பாலிவுட்' தொடரில் ரன்பீர் கபூர் இ சிகரெட் புகைப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அது குறித்த எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை. இது சட்ட மீறல்.
இது போன்ற காட்சிகள், தடை செய்யப்பட்ட இ சிகரெட் பயன்பாட்டை அதிகரிக்க தூண்டுகோலாக அமையும்" என்று மனித உரிமைகள் ஆணையம் புகார் அளித்திருக்கிறது.
இதன் அடிப்படையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மீதும், ரன்பீர் கபூர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
``இந்தியரை திருமணம் செய்தபின் என் வாழ்வில் நடந்த 3 மாற்றங்கள்" - உக்ரைன் பெண்ணின் வீடியோ வைரல்