சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது. இதில், ஒரு இந்தியர் ஜப்பானிய தம்பதியிடம் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு சரளமாக ஜப்பானிய மொழி பேசுகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து, பல மில்லியன் பார்வைகளையும் எண்ணற்ற லைக் மற்றும் கருத்துகளையும் பெற்று வைரலாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த வ்லாக்கர் ஒருவர் (@jaystreazy) இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு இந்திய ஆண் ஜப்பானிய தம்பதியிடம் தெளிவாகவும் நம்பமுடியாத அளவிற்கு திறமையாகவும் ஜப்பானிய மொழியில் உரையாடுகிறார். அவர் பேசும் விதம் தம்பதிகளை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீடியோவில், அந்த இந்தியர் ஜப்பானியத்தில் உரையாட தொடங்கும் நேரத்தில், தம்பதிகள் “நீங்கள் உண்மையிலேயே ஜப்பானிய மொழி பேசுகிறீர்களா?” என ஆச்சரியத்துடன் கேட்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
View this post on Instagram
இதற்கு மேலாக, அந்த நபரின் பேச்சுத் திறனுக்கும், நடைக்கும் ஒத்துப்போன வகையில் பலரும் பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியை நினைவுகூறி வருகிறார்கள். சமூக ஊடகங்களில் பலர், “இந்த நபர் பங்கஜ் திரிபாதி போலவே பேசுகிறார்”, “பங்கஜ் திரிபாதி ஜப்பானியத்தில் பேசுவது போல இருக்கு!” என கருத்துகள் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோ இதுவரை 4.9 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 3 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது. ஒரு இந்தியர், மற்றொரு நாட்டு மொழியில் இவ்வளவு சரளமாக உரையாடும் திறமை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இது போன்ற நிகழ்வுகள், இந்தியர்களின் பன்முக திறமைகளை உலகுக்கு மேலும் ஒரு முறை நினைவுபடுத்துகிறது.