அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்த 3 மாணவிகள்! பரிசோதனையில் வெளியான பகீர்
Top Tamil News September 24, 2025 08:48 AM

பொள்ளாச்சியை அடுத்த கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மூன்று பேர் சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பொள்ளாச்சியை அடுத்த கஞ்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மூன்று பேர், இன்று மயக்கமுற்ற நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அப்பள்ளியில் உள்ள ஆசிரியை, பள்ளி மாணவிகளை திட்டியதாகவும்,அதனால் மனம் உடைந்து பள்ளி மாணவிகள் மூவர் சாணி பவுடர் குடித்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்து பள்ளி ஆசிரியர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியோடு கஞ்சம்பட்டி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பள்ளி மாணவர்களை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து மருத்துவமனைக்கு விரைந்த பள்ளி மாணவிகளின் பெற்றோர் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.