அடேங்கப்பா… வீட்டிலேயே ராக்கெட்டை உருவாகிய 18 வயது இளைஞர்… 400 மீ தூரம் பறந்து சாதனை… ஆச்சரிய சம்பவம்…!!
SeithiSolai Tamil September 24, 2025 11:48 AM

சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்த ஜாங் ஷிஜியே(18) என்ற இளைஞர், தன் சகோதரியின் பழைய லேப்டாப்பை பழுது பார்த்து, இணையத்தில் கிடைத்த தகவல்களின் உதவியுடன் ராக்கெட் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

தென் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, பன்றி தடுப்பில் இருந்து நைட்ரேட் எடுத்து எரிபொருளாக மாற்றிய ஷிஜியே, 3D பிரிண்டர் மூலம் ராக்கெட் பாகங்களை உருவாக்கினார். பலமுறை தோல்வி அடைந்த பிறகும் விடாப்பிடியாக போராடிய இவர், 2023 ஜூன் மாதம் தன்னுடைய சொந்த ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவினார். அது சுமார் 400 மீட்டர் உயரம் பறந்தது. இது சீன முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே 14வது வயதில் தந்தையுடன் ராக்கெட் ஏவுதலை தொலைக்காட்சியில் பார்த்ததும், ஒருநாள் ராக்கெட் உருவாக்குவேன் என்ற இலக்கை பிணைத்துக் கொண்ட ஷிஜியுடன், அவரது பள்ளி நிர்வாகமும் கைகோர்த்தது. பள்ளிக்குள் தனிக் லாப் அமைக்கப்பட்டு, ஷிஜிக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது.

தற்போது, அவர் சீனாவின் புகழ்பெற்ற Shenyang Aerospace University-யில் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் படிக்க சேர்க்கப்பட்டுள்ளார். ஷிஜியின் சாதனை, உழைப்பும், கனவையும் இணைத்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கான நேரடி உதாரணமாக உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.