ஜிஎஸ்டி மாற்றத்தால் விலை குறைந்ததன் எதிரொலியாக நவராத்திரி திருவிழாவின் முதல் நாளில் 10 ஆயிரம் கார்கள் விற்பனையானதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பால் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவராத்திரி முதல் நாளில் Maruti Suzuki நிறுவனம் 30,000, Hyundai Motor நிறுவனம் 11,000 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் தங்கள் ஷோரூம்களில் இருந்து 10 ஆயிரம் கார்கள் விற்பனை செய்து டெலிவரி வழங்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் விற்பனை என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 80 ஆயிரம் வாடிக்கையாளர் விசாரணைகளையும் பதிவு செய்துள்ளது.