தேவையான பொருட்கள்:-
பாசிப்பருப்பு, சர்க்கரை, நெய், கோதுமை மாவு, தண்ணீர், ஏலக்காய், கேசரி பவுடர், முந்திரி.
செய்முறை
பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் வானலை வைத்து நெய் ஊற்றி முந்திரியை வறுத்து கொள்ளவும். ஏலக்காய் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் கனமான வானலை வைத்து அதில் வேகவைத்த பாசிப்பருப்பு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி நெய் சேர்த்து கலவை சுருண்டு வரும் வரை கிளறவும்.
அதில் கேசரி பவுடர், இடித்து வைத்துள்ள ஏலக்காய், கோதுமை மாவு சேர்த்து நன்கு கிளறி அல்வா பதம் வந்தவுடன் முந்திரி சேர்த்து இறக்கினால் அசோகா அல்வா தயார்.