Rishabh Shetty: காந்தாரா எனக்கு 5 வருட உணர்ச்சிப் பயணம்.. ரிஷப் ஷெட்டி பகிர்ந்த விஷயம்!
TV9 Tamil News September 24, 2025 03:48 PM

கன்னட சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty). இவர் கடந்த2022ம் ஆண்டு வெளியான காந்தாரா (Kantara) படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை இவரே இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருந்தார். கர்நாடக மக்களின் தெய்வமான பஞ்சுரலியின் கதையை அடிப்படையாக கொண்டு, இப்படமானது உருவாக்கப்பட்டிருந்தது. காந்தாரா படமானது வெளியாகி சுமார் ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் தொடர்ச்சியாக காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1) என்ற படமானது மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 2 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. மேலும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்திற்காக தனது 5 வருடங்களை செலவழித்து பற்றி ஓபனாக பேசியுள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : எனது அன்பின் துருவ்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – மாரி செல்வராஜ்

காந்தாரா படத்திற்காக தனது 5 வருட பயணம் பற்றி ரிஷப் ஷெட்டி பேச்சு

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிஷப் ஷெட்டி, அதில் காந்தாரா படம் பற்றிய பல்வேறு தகவல்களை ஓபனாக பேசியிருந்தார். மேலும் பேசிய அவர், ” இந்த காந்தாரா படமானது எனக்கு 5 வருடம் உணர்ச்சி பயணமாக இருந்தது. கந்தரா சாப்டர் 1க்கு 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு முன் உருவான காந்தாரா 1 படத்திற்கு 3 ஆண்டுகள் என கிட்டத்தட்ட 5 வருடங்களை இப்படத்திற்காக செலவழித்துள்ளேன்.

இதையும் படிங்க : இண்டர்ஸ்டியல் ஹிட் அடித்த லோகா சாப்டர் 1 சந்திரா – எத்தனை கோடிகள் வசூல் தெரியுமா?

இந்த 5 வருடங்களில் என் குடும்பத்தையோ மற்றும் எனது குழந்தைகளையோ சரியாக நான் கவனிக்கவில்லை, அதற்கான நேரமும் எனக்கு இருந்ததில்லை. இப்போதுதான் எனது சினிமாவை செய்து விட்டதுபோல இருக்கிறது” என நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி அந்த சந்திப்பில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

காந்தாரா படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் தொடர்பான பதிவு :

𝟏𝟎𝟕𝐌+ 𝐕𝐢𝐞𝐰𝐬 & 𝟑.𝟒𝐌+ 𝐋𝐢𝐤𝐞𝐬 𝐢𝐧 𝟐𝟒 𝐡𝐨𝐮𝐫𝐬…🔥
The Trailer of #KantaraChapter1 takes the internet by storm, igniting massive excitement everywhere.

Watch #KantaraChapter1Trailer now – https://t.co/YVnJsmn7Vx

In cinemas #KantaraChapter1onOct2 ✨#Kantara… pic.twitter.com/WyjLETiGsX

— Hombale Films (@hombalefilms)

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்

இந்த காந்தாரா சாப்டர் 1 படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்க, இப்படத்தில் முன்னணி ஹீரோயினாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இவர் தமிழில் மதராஸி மற்றும் ஏஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. இதுவரை சுமார் 107 மில்லியன் பார்வைகளை கடந்தும் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது உலகமெங்கும் வரும் 2025 அக்டோபர் 2ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.